போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் வெற்றி பெற்றார்.
போர்ச்சுகலில் உள்ள ஒயிராசில் சர்வதேச டென்னிஸ் ஓபன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ், ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டனை சந்தித்தார். முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய சோம்தேவ், இரண்டாவது செட்டையும் 6–3 என வசப்படுத்தி அசத்தினார். முடிவில், சோம்தேவ் 6–2, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 3 மாதங்களுக்குப்பின் சோம்தேவ் முதல் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த பிப்ரவரியில் நடந்த துபாய் ஓபன் தொடரில் அர்ஜென்டினாவின் ஜூயன் மார்டினை வீழ்த்தினார்.
